×

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.09 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

நாகப்பட்டினம்,மே7: பிளஸ்2 பொதுத்தேர்வில் நாகப்பட்டினம் மாவட்டம் 91.09 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 37வது இடத்தை பெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 71 பள்ளிகளில் இருந்து 3 ஆயிரத்து 12 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 2 ஆயிரத்து 675 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது 88.81 சதவீதம் ஆகும். அதே போல் 3 ஆயிரத்து 833 மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 567 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.06 சதவீதம் ஆகும். ஒட்டு மொத்தமாக 6 ஆயிரத்து 845 பேர் பிளஸ்2 தேர்வு எழுதியதில் 6 ஆயிரத்து 242 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 91.09 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 90.68 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட 0.51 சதவீதம் கூடுதல் ஆகும். கடந்த ஆண்டு நாகப்பட்டினம் கல்வி மாவட்டம் மாநில அளவில் 32வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 37வது இடத்தில் உள்ளது.

அரசு பள்ளி 89.15 சதவீதம் தேர்ச்சியும், முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளி 91.07 சதவீதமும், பகுதியாக அரசு உதவி பெறும் பள்ளி 91.57 சதவீதமும், சுயநிதி பள்ளி (மெட்ரிக்) 98.18 சதவீதமும், சுயநிதிபள்ளி 100 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது. புறாக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி, உம்பளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி, வேட்டைகாரனிருப்பு அரசு மேல்நிலைப்பள்ளி, பஞ்சநதிக்குளம் கிழக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, புஷ்பவனம் அரசு மேல்நிலைப் பள்ளி, தேத்தாக்குடி தெற்கு எஸ்.கே.அரசு மேல்நிலைப்பள்ளி, கருப்பம்புலம் பிவிடி அரசு மேல்நிலைப்பள்ளி, நாகப்பட்டினம் மாவட்ட மாதிரி மேல்நிலைப்பள்ளி, காமேஸ்வரம் கிழக்கு து£ய செபஸ்தியார் மேல்நிலைப்பள்ளி, ஏனங்குடி அல்அமான்கிரசண்ட் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, தேத்தாக்குடி தெற்கு அல்நூர் இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாகப்பட்டினம் ஜெஜெயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,

தோப்புத்துறை காயிதே மில்லத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாகப்பட்டினம் மதி பத்மாவதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆயக்காரன்புலம் ஆர்விஎஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேத்தாக்குடி தெற்கு சாரதாம்பாள் வித்யாஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாபாக்கோவில் சர் ஐசக் நியூட்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பஞ்சநதிக்குளம் மேற்கு விக்டரி மேல்நிலைப்பள்ளி ஆகிய 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் தேர்வு எழுதிய 44 அரசுப்பள்ளிகளில் 8 அரசு பள்ளிகள், பகுதியாக அரசு உதவி பெறும் 2 பள்ளிகளில் ஒரு பள்ளியும், 14 மெட்ரிக் பள்ளிகளில் 8 பள்ளிகளும், 2 சுயநிதிப்பள்ளிகளில் ஒரு பள்ளியும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. அரசு உதவி பெறும் 8 பள்ளிகளில் ஒரு பள்ளிகள் கூட 100 சதவீதம் தேர்ச்சி பெறவில்லை. அதே போல் ஒரு சிறப்பு பள்ளியும் 100 சதவீதம் தேர்ச்சி பெறவில்லை.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.09 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Nagapattinam district ,Nagapattinam ,Plus2 General Election ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடிநீர்...